"மகளிர் உரிமைத்தொகை முழுமையாக சென்றடையவில்லை.. பெண்கள் பலர் ஏமாற்றத்தில் உள்ளனர்" - அண்ணாமலை

0 2753

தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டம் முழுமையாக சென்றடையவில்லை என்றும் பெண்கள் பலர் ஏமாற்றத்தில் இருப்பதாகவும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் பேசிய அவர், தமிழக அரசும் அதிகாரிகளும் செய்ய வேண்டிய பணிகளை பாஜக தொண்டர்கள் செய்து வருவதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,பிரதமர் நரேந்திர மோடி மீது முதலமைச்சர் ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கதல்ல என்றார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரான கட்சி திமுக எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

மகளிர் உரிமை தொகை திட்டம் முழுமையாக பெண்களை சென்று அடையவில்லை எனக்கூறிய அண்ணாமலை, குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்த மாநில அரசு முயற்சிப்பதாகத் தெரிவித்தார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments